தமிழகம் : அடுத்த கட்ட ஊரடங்கில் தளர்வுகள்

அடுத்த கட்ட ஊரடங்கில் தமிழகம் முழுவதும் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் : அடுத்த கட்ட ஊரடங்கில் தளர்வுகள்
x
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் சென்னையைத் தவிர்த்து மற்ற முழு ஊரடங்கு பகுதிகளில் 6ம் தேதி முதலும், தமிழகத்தின் இதர பகுதிகளில் நாளை முதலும் அமலுக்கு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுடன் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படும். தொழில்நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 

எனினும் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்கப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் நகை, ஜவுளி விற்கும் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரு நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், குளிர்சாதன வசதி கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்தையும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. வாடகை டாக்சிக்கள் 3 பயணிகளுடனும், ஆட்டோக்கள் 2 பயணிகளுடனும் இயங்கலாம். இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்