தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை - ஒரே நாளில் 3,940 பேருக்கு பாதிப்பு

நேற்று ஒரே நாளில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 54 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கை - ஒரே நாளில் 3,940 பேருக்கு பாதிப்பு
x
கொரோன பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில், நேற்று, அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேர் என மொத்தம் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னையில் 34 பேரும், மதுரை, செங்கல்பட்டில் தலா 5 பேரும், ராமநாதபுரம், திருவள்ளூரில் தலா 2 பேரும், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல்,நெல்லையில் மாவட்டங்களில்  தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை  வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இதையடுத்து, தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கரூர், கிருஷ்ணகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று பதிவாகியுள்ளது. உயிரிழப்புகளை பொறுத்த வரையில், சென்னையில் இதுவரை 809 பேரும், செங்கல்பட்டில் 80 பேரும், திருவள்ளூரில் 61 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மதுரையில் 25 பேரும், காஞ்சீபுரத்தில் 19 பேரும், விழுப்புரத்தில் 14 பேரும், திருவண்ணாமலையில் 9 பேரும், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் தலா 6 பேரும் பலியாகியுள்ளனர்.கடலூர், விருதுநகரில் தலா 5 பேரும், வேலூர், திருச்சி, தூத்துக்குடியில் தலா 4 பேரும், ஈரோடு, ராணிப்பேட்டையில் தலா 3 பேரும், தேனி, சிவகங்கை, சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர்.கோவை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், தஞ்சாவூர் மற்றும் விமானநிலைய கண்காணிப்பில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்