இ- பாஸ் மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி - ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம்

இ-பாஸ் மோசடியில் கைதான சென்னை மாநகராட்சி அதிகாரி, வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தவர்களை வைத்து பெரிய அளவில் திட்டமிட்டு வேலை பார்த்து மோசடியில் ஈடுபட்டிருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இ- பாஸ் மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி - ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம்
x
ஊரடங்கு நேரத்தில் மக்கள் அவசர தேவைக்காக வெளியூர் செல்வதற்காக தமிழக அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி இ-பாஸ் அதிகாரி குமரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் உதயகுமார், கார் ஓட்டுநர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் முக்கிய குற்றவாளியான குமரன், ஒரு இ-பாஸுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலித்ததாகவும், இதுவரை 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்களை கார் ஓட்டுநர்களின் உதவியோடு தயாரித்து விற்றதும் தெரியவந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ளவர்களை வொர்க் ப்ரம் ஹோமில் வைத்து இந்த போலி பாஸ் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தியதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் கோவையை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருந்தார் என்ற தகவல் வெளியானதோடு, மோசடியில் உடந்தையாக இருந்த சில கால்டாக்சி டிரைவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்