தமிழகத்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகரிக்கும் - எச்சரிக்கும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. குழு ஆய்வு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்த மருத்துவ குழுவின் கணிப்பைவிட உயிரிழப்பு அதிகரிக்கும் என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு அதிகரிக்கும் - எச்சரிக்கும் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை. குழு ஆய்வு
x
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. 

ஜூலை மாதத்தில் தமிழகத்தில் கொரனோ உயிரிழப்புகள் 3000 ஆக அதிகரிக்க வாய்ப்பு - டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ குழு ஆய்வில் தகவல் இதன்படி, ஜூலை மாதத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், தலைநகர் சென்னையில் 60 சதவீத தொற்றுகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதேபோல், ஜூலை மாதத்தில், தமிழகத்தில் உயிரிழப்பு இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ஆய்வை தாண்டி, அதாவது 25 ஆயிரத்து 872 பேருக்கு தொற்று உள்ளதாகவும், 208 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 341 ஆகவும், ஜூலை 2ஆம் வாரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகவும் பரவ வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. சென்னையில் ஜூன் மாத இறுதியில் 71 ஆயிரம் பேருக்கு தொற்று இருக்கும் என்றும், ஜூலை 2ஆம் வாரத்தில் ஒன்றரை லட்சமாக அதிகரிக்கும் என்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. 

ஜூலை மாத இறுதியில், உயிரிழப்புகள் ஆயிரத்து 654 ஆகவும், தமிழகம் முழுவதும் மூவாயிரத்து 72 என இரட்டிப்பாகும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் தொற்று உச்ச நிலையை அடையும் என்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் குழு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்