சேலத்தில் பரவி வரும் கொரோனா - விதிகளை கடுமையாக்கிய மாவட்ட நிர்வாகம்

சேலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
சேலத்தில் பரவி வரும் கொரோனா - விதிகளை கடுமையாக்கிய மாவட்ட நிர்வாகம்
x
அதன்படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை தொடர்ந்து இன்று சேலத்தில் உள்ள அனைத்து தேநீர் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. உணவுகள் மற்றும் பேக்கரிகளில் அமர்ந்து உணவு உட்கொள்ள தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடைகள் முன்பு கயிறுகள் கட்டப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றும் விதமாக உணவு பொருட்கள் பார்சல் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகள்,  மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் கொடுக்ககூடாது அவ்வாறு மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து மாத்திரைகள் வழங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்