பயிர் பாதுகாப்பு நிதி - ரூ. 54.46 லட்சம் ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
x
மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து, 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் கண்டறியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த பாதிப்பை குறைக்க, பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு  உத்தரவிட்டுள்ளார். மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு ஆயிரத்து 750 ரூபாய் வீதம்,  3 ஆயிரத்து 112 ஹெக்டரில் பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்