"கொரோனா உதவி - உத்தரவை மீறினால் நடவடிக்கை"

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா நிவாரண உதவி தொடர்பாக, சில முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா உதவி - உத்தரவை மீறினால் நடவடிக்கை
x
பொது மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

* உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை, பொது மக்களுக்கு நேரடியாக வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கொரோனா தொற்று நடவடிக்கைகளுக்கு நிதிஉதவி செய்ய விரும்பினால், அதனை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

* பொருட்களாக வழங்க விரும்பினால், சென்னையை பொறுத்தவரை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியர்களிடம் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இதனை மீறி செயல்படும் நபர்கள்  மீது, ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்