சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்
x
மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்து தங்கி இருந்த 10 பேர் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர். இந்தநிலையில், அவர்கள் 144 தடையை மீறி, நீடூரில் மத பிரசாரம் செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் அருள் புகார் அளித்தார். இதையடுத்து, 10 வெளிநாட்டினரின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் மீதும், நீடுரைச் சேர்ந்த சபீக் அகமது உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்