தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவர் - பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
பதிவு : பிப்ரவரி 15, 2020, 07:44 AM
துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
குரூப் 1  தேர்வில் வெற்றி பெற்ற பாபு பிரஷாந்த் என்பவர் டி.எஸ்.பியாக பயிற்சி பெற்று வந்தார். துணை ஆட்சியர் ஆக விரும்பிய அவர், கடந்த 2017ம் ஆண்டு  குரூப் 1 தேர்வில் கலந்து கொண்டு  2 தேர்வுகளை எழுதினார். 3-வது தேர்வில் தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை அவர் அடித்துள்ளார். இதை கவனித்த தேர்வு அறை  கண்காணிப்பாளர், விடைகளை அடித்த பக்கங்களில் கையெழுத்திட நிர்பந்தித்ததால், அந்த பக்கத்தில்  பாபு பிரஷாந்த்  கையெழுத்திட்டுள்ளார். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, 29 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில்,  தேர்ச்சி பட்டியலை எதிர்த்து பாபு பிரஷாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  விடைத்தாளில் கையெழுத்திட கூறியது தவறு என தேர்வு கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி,  கண்காணிப்பாளர்கள், தேர்வு எழுதுபவர்களை முறையாக வழிநடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். நல்ல மதிப்பெண் பெற்றுள்ள பாபு பிரஷாந்தின் விடைத்தாளை மதிப்பிட்டு, நேர்முக தேர்வு நடத்தி, தகுதி பெற்றால் அவருக்காக புதிய பதவியை உருவாக்கி பணி வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு,  நீதிபதி பரிந்துரைத்தார். இந்த உத்தரவு வேறு எந்த வழக்குக்கும்  பொருந்தாது எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

192 views

பிற செய்திகள்

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

34 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

121 views

சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டு

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

16 views

ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு

வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

14 views

நியாய விலைகடைகளில் இலவச தொகுப்புகள் : பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரம்

மதுரை அவனியபுரம் பகுதியில் ஏப்ரல் 2 முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான பொருள்கள் தற்போது லாரிகள் மூலம் கடைகளுக்கு இறக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

10 views

காய்கறி மார்க்கெட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

கோவையில் தற்காலிகமாக இயங்கி வந்த அண்ணா மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என கூறி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.