ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4000 கோடியில் டயர் தொழிற்சாலை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4000 கோடியில் டயர் தொழிற்சாலை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்
x
கடந்த 2018 ஆம் ஆண்டில், தமிழக அரசு மற்றும் சியட் டயர் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.  மதுராமங்கலத்தில் தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தப்படி, இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற் சாலை அமைய உள்ளது. இதன் மூலம், நேரடியாக ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக பத்தாயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று காலை 11மணிக்கு துவக்கி வைக்கிறார்.
அண்மையில் போர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தது  குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்