அரசு நிறுவனங்களில் குடியரசு தினவிழா...

71 வ‌து குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொடியேற்றும் நிகழ்சிகள் நடைபெற்றன.
அரசு நிறுவனங்களில் குடியரசு தினவிழா...
x
நெய்வேலி 

2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு மணி நேரத்தில் 21 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளதாக நெய்வேலி  என்எல்சி தலைவர் கூறியுள்ளார். என்எல்சி நிறுவனத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழாவில், அதன் தலைவர் ராகேஷ் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கூடங்குளம்

கூடங்குளம் முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளின் மூலம் 9 ஆயிரத்து 400 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப் பட்டுள்ளதாக வளாக இயக்குனர் சஞ்சய்குமார் கூறினார். அங்கு நடைபெற்ற குடியரசு தின விழாவில் கொடியேற்றிய அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

சென்னை

சென்னை துறைமுகத்தில், நடைபெற்ற குடியரசு தின விழாவில்,  துறைமுக பொறுப்பு கழக தலைவர்  ரவீந்திரன் தேசிய கொடியேற்றி  மத்திய பாதுகாப்பு  படையினரின்  அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். நிகழ்ச்சியில் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், துறைமுக அதிகாரிகள் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

சென்னை துறைமுகம் 

சென்னை, மண்ணடியில் சுங்கத்துறை அலுவலகத்தில், சென்னை மண்டல சுங்கத் துறை முதன்மை  ஆணையர் எம்.எம் பார்த்திபன் தேசிய கொடி ஏற்றினார். முன்னதாக சுங்க வரி அதிகாரிகளின் அணிவகுப்பு, தமிழ்நாடு காவல்துறை அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் அணிவகுப்பினை மரியாதை நிமித்தமாக ஏற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்