குடியரசு தின விழாவில் சலசலப்பு - தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செய்ய தாமதமானதாக குற்றச்சாட்டு

சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் தாமதமாக மரியாதை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு தின விழாவில் சலசலப்பு - தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செய்ய தாமதமானதாக குற்றச்சாட்டு
x
சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு , சேலம் மாவட்ட ஆட்சியர் தாமதமாக மரியாதை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு , சேலம் காந்தி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியேற்றினார். வழக்கமாக தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்வு மூன்றாவதாக நடைபெறும். ஆனால் ஆட்சியர் கொடியேற்றி ஒரு மணி நேரம் ஆகியும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறாததால் தியாகிகளின் வாரிசுகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. தங்களை ஆட்சியர் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டிய தியாகிகள், பின்னர் ஆட்சியர் அளித்த மரியாதையை ஏற்க மறுத்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தியாகிகளின் வாரிசுகள், ஆட்சியரின் மரியாதையை ஏற்று கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்