தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் குடியரசு தின விழா

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில், முதல் குடியரசு தின விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் குடியரசு தின விழா
x
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில், ஆட்சியர் திவ்யதர்ஷினி, கொடியை ஏற்றினார். தொடர்ந்து, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் சமாதானத்தை பறைசாற்றும் வகையில் புறாக்களை பறக்க விட்டனர். இதையடுத்து, ஆட்சியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சியில், மூவர்ண கொடியை மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா ஏற்றி வைத்தார். தொடர்ந்து, அணி வகுப்பை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், கலைநிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மரியாதை செய்தார். 

தென்காசி
           
தென்காசியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தேசிய கொடியை ஏற்றினார். அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், பின்னர் மூவர்ண பலூனை பறக்கவிட்டார். தொடர்ந்து முதலமைச்சரின் பதக்கங்களை போலீசாருக்கு அணிவித்தார். இதையடுத்து, சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்தன் பாரதியை கவுரவிக்கப்பட்டார். 

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில், வெண்பாக்கம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் 71வது குடியரசு தினம் அனுசரிக்கபட்டது. இதில்
மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணி வகுப்பை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்