"டிக்டாக் பிரபலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு" - தோழிகளாக வந்தவர்கள் வலைவிரிப்பு என புகார்

டிக்டாக் செயலி மூலம், பழகி பெண்ணை பாலியல் தொழிலுக்கு இரண்டு பெண்கள் அழைத்ததால், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை பூதாகரமாகி உள்ளது.
டிக்டாக் பிரபலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு - தோழிகளாக வந்தவர்கள் வலைவிரிப்பு என புகார்
x
வேலூர் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் டிக்டாக் செயலியில், விழிப்புணர்வு பிரசாரம் முதல் பாலியல் விவகாரம் குறித்து பேசி வருகிறார். 

33 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்துள்ள அவர், சில நேரங்களில், ஆபாச பாடல்களுக்கும் உடல்மொழியில் அசத்தி ரசிகர்கள் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளார். 

அவரது டிக்டாக்கில் லயித்த சென்னையைச் சேர்ந்த டிக்டாக் பெண்கள் மூவர், திடீரென செஞ்சிக்கே சென்று தோழிக்கு, இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். அவர்களில் ஒருவருக்கு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து, ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு அளித்துள்ளனர். பின்னர், அனைவரும் கூட்டாக டிக்டாக் செய்து நட்பை பலப்படுத்தினர். 

இந்நிலையில், செஞ்சியை சேர்ந்தவரின் வீடு சிறியதாகவும், ஆடம்பரம் இல்லாமலும் இருந்துள்ளது. அது குறித்து கேட்ட சென்னை தோழிகள், அறிமுகம் செய்து வைக்கும் நபருடன் சென்றால், 2 லட்சம் ரூபாய் கிடைக்கும் என வற்புறுத்தியதாக புகார் கூறுகிறார் செஞ்சி பெண். 

தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்ததை  செஞ்சி பெண் பகிரங்கப்படுத்த, டிக்டாக் தோழிகளும் அவர் மீது குற்றச்சாட்டை அடுக்க அந்த களேபரம் ரசிகர்களுக்கு விருந்தாகிவிட்டது.

ஒருவர் மாற்றி ஒருவர் காது கூசும் அளவுக்கு ஆபாச குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியுள்ளனர். ஒற்றை ஆளாக தாக்குப் பிடிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான செஞ்சி பெண், மின் விசிறியில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். 

பொதுவெளியில் பெரிதும் மதிப்புக்குரிய குடும்பப் பெண்கள், சமூக வலைதள செயலிகள் தரம் தாழ்ந்து போவதால் அவர்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. 

இந்த பிரச்சினையை அவர்களை தவிர யாராலும் தடுக்க முடியாது என்றும், பெண்கள் பொதுவெளியில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும்  என்பதே காவல்துறையினர் எச்சரிக்கை.... 


Next Story

மேலும் செய்திகள்