டிஎன்பிஎஸ்சியில் 10 உறுப்பினர் பணியிடங்கள் காலி

டி.என்.பி.எஸ்.சி.-யின் தலைவராக இருக்கும் அருள்மொழி, மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் போதிய உறுப்பினர்களும் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியில் 10 உறுப்பினர் பணியிடங்கள் காலி
x
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 10 உறுப்பினர்கள் பதவி இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது தலைவராக உள்ள அருள்மொழியின் பதவிக்காலமும் வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், தேர்வாணைய பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு துறைகளுக்கெல்லாம் ஆட்களை தேர்வு செய்யும் அமைப்பிலேயே ஏராளமான பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பது, நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழக அரசு உடனடியாக காலியாக உள்ள 10 உறுப்பினர் பதவிகளை நிரப்பவும், அடுத்த தலைவரை நியமனம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்