"தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
பள்ளியில் தமிழ் வழியில்  படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியில் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல, தமிழகத்திலும் வழங்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசின் சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்