குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்- ஸ்டாலின் வரவேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்- ஸ்டாலின் வரவேற்பு
x
இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், கேரள சட்டப்பேரவையில்,  குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், இந்த பணியை, ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையும் நிறைவேற்ற வேண்டும்  என்பது நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, வரும் ஆறாம் தேதி கூட உள்ள தமிழக சட்டப்பேரவையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் ஸ்டாலின், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்