சாலை தடுப்பை தாண்டி எதிர்ப்பக்கம் கவிழ்ந்த மினி லாரி : ஆந்திரா தொழிலாளர்கள் உள்பட 7 பேர் படுகாயம்

திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில், ஆந்திர தொழிலாளர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சாலை தடுப்பை தாண்டி எதிர்ப்பக்கம் கவிழ்ந்த மினி லாரி : ஆந்திரா தொழிலாளர்கள் உள்பட 7 பேர் படுகாயம்
x
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சிமென்ட் கலவை இயந்திரம் ஏற்றிச் சென்ற மினி லாரி சாலைத் தடுப்பை தாண்டி,  நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானம் மற்றும் ஆந்திர தொழிலாளர்கள்   உள்பட 7 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  சாலை நாடுவே லாரி கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்