நீட் தேர்வு விண்ணப்பம் - இன்றே கடைசி நாள்

இன்று இரவு 11.50 மணியுடன் நீட் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடையும் நிலையில், இந்தியா முழுவதும் 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வு விண்ணப்பம் - இன்றே கடைசி நாள்
x
நாடு முழுவதும் நீட் போட்டித்தேர்வு வரும் மே மாதம் 3 ம் தேதி  நடைபெறுகிறது. இதற்காக இணையதளம் வழியாக கடந்த 2 ஆம் தேதி முதல் இன்று இரவு 11 . 50 மணி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்த‌து. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே  3 ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில்,  முடிவுகள், ஜூன் 4 ல் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்