ஆங்கில புத்தாண்டு : ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் 250 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டு : ரூ.250 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்
x
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று மாலை முதல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. இந்நிலையில், நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால், இன்று அதிகளவு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றும் நாளையும் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி  உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக, அன்றைய தினம் மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் முன்னதாகவே மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2019 புத்தாண்டின் போது 200 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்