சேவூர்: ஓட்டுக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய வேட்பாளர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேவூர்: ஓட்டுக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய வேட்பாளர்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டைகளை வழங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ளாட்சி தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிக்கு நிற்கும் வேட்பாளர் கெளரி ராதாகிருஷ்ணன்  ஒன்றிய கவுன்சிலர் தர்மன், ஊராட்சி மன்ற தலைவர் தீபாசம்பத் ஆகியோர் ஒன்றிணைந்து, ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டையை வழங்கினர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல், எச்சரித்து விட்டு சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்