உள்ளாட்சி தேர்தல்- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களிக்கும் வாக்காளர்கள்
x
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதில் ஆயிரத்து 551 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

2ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. 

158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். 

போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரத்து 4 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்வதுடன், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. 

இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
Next Story

மேலும் செய்திகள்