ஊரக உள்ளாட்சி தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

மதுரையில், நடைபெற்றும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில், மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 72 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு
x
மதுரையில், நடைபெற்றும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில், மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 72 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். போட்டியின்றி தேர்வான வேட்பாளர்களை தவிர்த்து, ஆயிரத்து 576 பதவிகளுக்கு 4 ஆயிரத்து 652 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில், ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் ஆயிரத்து 214 பதவிகளுக்கு 4 ஆயிரத்து17 பேர் போட்டியிடுகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்து 245 மையங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுயேட்சை வேட்பாளரின் சின்னம் மாறிய காரணத்திற்காக விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட  உட்பட்ட பாக்குடி ஊராட்சியில், 13 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

திருப்பூர் மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆயிரத்து 247 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 953 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 920 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்