குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வீடுகளில் கோலம் வரைந்து நூதன போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவர்கள் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வீடுகளில் கோலம் வரைந்து நூதன போராட்டம்
x
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவர்கள் கோலம்  வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  சாஸ்திரி நகர்  போலீசார், கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், அவர்கள் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர், கைதான மாணவர்களை, போலீசார் விடுவித்தனர். இதனிடையே, கோலம் போட்ட 6 பெண்கள் மீது  3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்