காங். கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு - அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார்

சென்னை வண்ணாரப்பேட்டையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங். கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு - அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார்
x
சென்னை வண்ணாரப்பேட்டையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கி 134 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று கூட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். இந்நிலையில், அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ்  வடசென்னை மாவட்ட தலைவர் மற்றும் 50 வட்ட தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்