ஊட்டி: தேயிலை பூங்காவில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்

ஊட்டி தேயிலை பூங்காவில் காட்டெருமைகள் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி: தேயிலை பூங்காவில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்
x
ஊட்டி தேயிலை பூங்காவில் காட்டெருமைகள் சுற்றித் திரிவதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தொடர் விடுமுறை என்பதால் ஊட்டி தொட்டபெட்டாவில் உள்ள தேயிலை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். இதனிடையே, சோலைக் காடுகளிலிருந்து 20 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் மேய்ச்சலுக்காக, பூங்கா பகுதியில் சுற்றித் திரிவதால், சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காட்டெருமைகளுக்கு அருகில் சென்று யாரும், புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்