ழைய ரூபாய் நோட்டுகளில் பணம் தருவதாக மோசடி - பங்களாவில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார்

கோவையில் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக இரட்டிப்பாக பழைய ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ழைய ரூபாய் நோட்டுகளில் பணம் தருவதாக  மோசடி - பங்களாவில் அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார்
x
வடவள்ளி லட்சுமி நகரில் உள்ள சொகுசு பங்களாவில், உக்கடத்தை சேர்ந்த ரஷீத், ஷேக் ஆகியோர் வாடகைக்கு தங்கி இருந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அவர்கள், புதிய ரூபாய் நோட்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக பழைய ரூபாய் நோட்டுகளில் 2 லட்சம் ரூபாய் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். மத்தியில் ஆட்சி மாறியவுடன் பழைய ரூபாய் நோட்டுகளை திருப்பி தருமாறு கூறி, அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பங்களாவில், நேற்று பேரூர் டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த 660 பழைய ரூபாய் நோட்டு  கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றின் மேல் பகுதியில் மட்டும் பழைய ஆயிரம் ரூபாய் தாளை வைத்துவிட்டு, மீதி பேப்பர்களை மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். சோதனையில், 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய  ரசீத், ஷேக் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்