செங்கல்பட்டு : தனியார் விடுதியில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை

செங்கல்பட்டில் தனியார் விடுதி அறையில், கன்னியாகுமரியை சேர்ந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு : தனியார் விடுதியில் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
x
செங்கல்பட்டில் தனியார் விடுதி அறையில், கன்னியாகுமரியை சேர்ந்த நபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவர் ரயில் மூலம் செங்கல்பட்டு ரயில்நிலையம் வந்த நிலையில், அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில், மறுநாள் மாலை வரை, அறை திறக்கப்படாததை அடுத்து சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர், மாற்று சாவியை வைத்து அறையை திறந்துள்ளார். அப்போது, கிறிஸ்டோபர், தூக்கில் தொங்கிய படி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்