நட்சத்திர விடுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் : பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல்துறை

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, சென்னை மாநகர காவல் துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது.
நட்சத்திர விடுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் : பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல்துறை
x
இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 வரை நட்சத்திர விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 

நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மது விருந்து கொண்டாட்டங்களை அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீச்சல் குளத்தின் மீது எந்தவிதமான கொண்டாட்டங்களிலோ அல்லது  கேளிக்கை விருந்துகளிலோ ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
பெண் விருந்தினர்கள் வந்தால், அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது
மது போதையில் இருப்பவர்களை ஓட்டுனர்களை வைத்து காரில் பாதுகாப்போடு அனுப்பி வைக்க வேண்டியது விடுதி  நிர்வாகத்தின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களை சிசிடிவி கேமராக்களை வைத்து நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது
மது போதையில் வேண்டு மென்றே திட்டமிட்டு பிரச்சினைகளில் ஈடுபட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ, தகவல் தெரிவிக்குமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தபட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்