வாக்கு எண்ணிக்கையை மக்களுக்கு ஒளிபரப்ப வேட்பாளர் மனு - 30-ம் தேதி விசாரணைக்கு வரும் என தகவல்

வாக்கு எண்ணிக்கையை மக்களுக்கு ஒளிபரப்ப கோரி தொடரப்பட்ட மனு, வரும் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
வாக்கு எண்ணிக்கையை மக்களுக்கு ஒளிபரப்ப வேட்பாளர் மனு - 30-ம் தேதி  விசாரணைக்கு வரும் என தகவல்
x
கடலூர் மாவட்டம் கள்ளிப்பட்டு கிராம ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஆனந்தன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததும் அதை திரும்பப் பெறும் படி ஆளுங் கட்சியினர் தன்னை மிரட்டியதாகவும் ஆளுங்கட்சி ஆதரவாளர் தான் தலைவராக வருவார் எனக் கூறியதாகவும்  தெரிவித்துள்ளார். அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாலும் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்யவும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வீடியோ பதிவை மையத்துக்கு வெளியில் உள்ள மக்களுக்கு ஒளிபரப்பு செய்ய கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு 30ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்