ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி உடன் நிறைவு பெற்றது.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி உடன் நிறைவு பெற்றது. முதல் கட்டத்தில், 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்காக, 13 ஆயிரத்து 764 அலுவலர்களும், 63 ஆயிரம் போலீசாரும்   தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்