வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - அதிக வாக்காளர்கள் நிறைந்த தொகுதி வேளச்சேரி

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாகநராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பிரகாஷ் வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - அதிக வாக்காளர்கள் நிறைந்த தொகுதி வேளச்சேரி
x
புதிய வரைவு வாக்காளர்கள் பட்டியல்படி, சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளதாகவும்,
32 ஆயிரத்து 362 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். 

இன்று முதல், ஜனவரி 22 ம் தேதி வரை வாக்காளர்கள் பெயர்களை சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்