தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு
x
மதுரை

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் திடீரென பள்ளிவாசல் அருகே குவிந்து, தேசிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர்

திருவாரூரில், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுக, தமமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியை
சார்ந்தவர்களும் பங்கேற்றனர்.

கும்பகோணம்


கும்பகோணத்தில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் என பல்வேறு கட்சிகளும் ஆதரவளித்தனர். 

கொடைக்கானல்

கொடைக்கானல் நகரில் உள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரில் 75 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 
Next Story

மேலும் செய்திகள்