9 ம் வகுப்பிற்கு 2 தாள்கள் தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மொழிப் பாடங்களில் ஒரே தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 தேர்வுகள் நடத்தப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 ம் வகுப்பிற்கு 2 தாள்கள் தேர்வு
x
10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களில், முதல்தாள் மற்றும்  2ம் தாள் என இரண்டு தேர்வு என்பதை மாற்றி, ஒரு தாள் தேர்வு என்ற நடைமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில், ஒரு தாள் தேர்வு முறை அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த புதிய நடைமுறைகள்படி தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. ஆனால், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் பாடங்களில் தலா இரண்டு தேர்வு நடத்தப்பட்டு வருவது, குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்