"வரும் 23-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு"

வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வரும் 23-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 23-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வரும் 16--ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருந்ததாக கூறினார். தமிழகத்தில், தற்போது, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், 23-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படும் தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என அவர், தெரிவித்தார். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என சத்திய பிரதா சாகு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்