ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
x
திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த உத்திராபதி மெடிக்கல் ஏஜென்சி நடத்தி வந்த நிலையில்,  அவருக்கு 20 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பமே மன உளைச்சலில் தவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக உத்திராபதி வீட்டின் கதவு பூட்டப்பட்டு, செல்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், கொடைரோடு ரயில் நிலையம் அருகே மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில் தண்டவாளத்தில், உத்திராபதி, அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில், வேறு காரணங்கள் உள்ளதா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்