"சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ஊழல்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம்  ஊழல் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், 'ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்' பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியால் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆற்றுமணலை விட எம்-சாண்ட் விலை குறைவு என்ற நிலையில், ஒப்பந்தங்களில் கான்கிரீட்  கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகையின் சந்தை விலை  30 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை,  ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்