கவரிங் நகைகளை திருடி ஏமாந்த திருடர்கள்...

அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தில், டீ கடை நடத்தி வரும் மூதாட்டியை தாக்கி கொள்ளையர்கள் கவரிங் நகைகளை அபகரித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவரிங் நகைகளை திருடி ஏமாந்த திருடர்கள்...
x
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தில், டீ கடை நடத்தி வரும் மூதாட்டியை தாக்கி கொள்ளையர்கள் கவரிங் நகைகளை அபகரித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீ குடிக்க வந்தது போல் நடித்த மர்ம நபர்கள் இருவர், பாப்பா என்ற அந்த மூதாட்டியிடம் நகை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, நாய் குரைத்ததும், அதை கல்லால் தாக்கி கொன்று  செயின் மற்றும் வளையல்களை திருடிச் சென்றனர். ஆனால் திருடி சென்ற நகைகள் கவரிங் என பின்னர் விசார​ணைக்கு வந்த போலீசாருக்கு தெரிய வந்தது.  இது நகைகளை பறித்து சென்றவர்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்