ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வும் திமுக தலைவருவமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், ஸ்டாலின்
x
சென்னை கொளத்தூர் தொகுதியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அத்தொகுதியின் எம்.எல்.ஏ-வும், திமுக தலைவருவமான ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின் திரு.வி.க. நகரில் மருத்துவமனையை மேம்படுத்தும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதேபோல் நேர்மை நகரில்  20 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பிட வசதிக்கும் அடிக்கல் நாட்டினார். வினோபா நகர், இந்திரா நகர் ஆகிய இடங்களில் போர்வெல் பணியை துவக்கி வைத்த ஸ்டாலின், கார்த்திகேயன் சாலையில் 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்