கரூரில் ரயில் நிலையத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயற்சி

கரூரில் ரயில் நிலையத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் ரயில் நிலையத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயற்சி
x
கரூரில் ரயில் நிலையத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கரூர் முதல் சேலம் வரை அகல ரயில் பாதை அமைப்பதற்காக, கடந்த ஆயிரத்து 999-ஆம் ஆண்டு, வாங்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது, இது தொடர்பான வழக்கில், சுப்பிரமணியனுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, கடந்த 2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை ரயில்வே நிர்வாகம்  இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில் நிலையத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றனர்.

Next Story

மேலும் செய்திகள்