உள்ளாட்சி தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை​

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக சென்னை மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை​
x
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சென்னையை சேர்ந்த 5 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், மூத்த அமைச்சர் ஜெயக்குமார், அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன், மற்றும் பா. வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கான வியூகம் குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.Next Story

மேலும் செய்திகள்