"தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி" - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வில் மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி - ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
x
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 பதவிகளுக்கான முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 23 ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். அதில் கலந்து கொள்பவர்களின் மதிப்பெண்களை பேனாவால் எழுதக்கூடாது என்றும், கண்டிப்பாகப் பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதாக அறிவதாக வைகோ தெரிவித்துள்ளார். கிராமப் புறங்களைச் சேர்ந்த,  ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த, எந்தப் பின்புலமும் இல்லாத, தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்ற இந்தக் கொடுமை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிப்பு எண்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும், அனைத்து நேர்காணல்களையும், காணொளிப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்