வரும் 15-ல் தமிழக அரசு அதிகாரிகள் சீனா பயணம்

தமிழகத்தில் தொழில் தொடங்க சீன நிறுவனங்களுடன் பேச்சு என தகவல்.
வரும் 15-ல் தமிழக அரசு அதிகாரிகள் சீனா பயணம்
x
சீன அதிபர் வருகையை தொடர்ந்து, சீன அதிகாரிகள் தமிழகம் வந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அடுத்த கட்டமாக, தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன், உள்ளிட்ட 4 அதிகாரிகள் வரும் 15 முதல் 21 ஆம் தேதி வரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த பயணத்தின் போது,  பீஜிங், ஃபூட்சோ, ஹாங்காங், உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும்,  கிரேட்வால் மோட்டார்ஸ், ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி, ஆகிய நிறுவனங்களை பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது,  தமிழகத்தில் அந்நிறுவனங்கள்  தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்