"பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது" - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி

புளியோதரை, பொங்கல், உண்டை கட்டி என ஆன்லைன் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசி வந்த நித்தி, தன் அருமை பெருமைகளில் ஒன்றான பைனாப்பிள் பிரசாதம் பற்றி பேசி கலகலப்பூட்டி இருக்கிறார்.
பைனாப்பிள் கொடுத்தேன்.. பாப்பா பிறந்தது - சத்சங்கம் நிகழ்வை கலகலப்பாக்கிய நித்தி
x
நித்தி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறையே கைவிரிக்கும் அளவுக்கு ஜெகஜால கில்லாடியாக இருக்கிறார் நித்தி. வெளிநாட்டினர் அடுத்தடுத்து முன்வைக்கும் புகார்கள் ஒரு பக்கம், கைலாசாவை அமைத்தே தீருவேன் என குமுறும் நித்தி மறுபக்கம் என நித்தி தொடர்பான செய்திகள் தான் இப்போதைக்கு ஹாட் டாபிக்.. 

தன்னுடைய பாஸ்போர்ட்டை மதுரை மீனாட்சி ரினிவல் செய்து கொடுத்துவிட்டார் என நித்தி கூறிய நிலையில் அப்படி எல்லாம் ஒரு சம்பவம் நடக்கவே இல்லை, அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டோம் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. 

இந்த சூழலில் தான் ஆன்லைனில் சத்சங்கம் நிகழ்ச்சியில் பேசிய நித்தி, பக்தர்களுக்கு பைனாப்பிள் கொடுத்த கதையை சுவை குறையாமல் பேசி அசத்தியிருக்கிறார்... 

மாற்று மதத்தினராக இருந்தாலும் இந்து மத நடைமுறைகளை பின்பற்றினால் அவர்கள் கைலாசாவிற்கு வரலாம் என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் நித்தி. நித்தியின் கனவு தேசமான கைலாசா கைகூடுமா? இல்லை கானல் நீராகவே மாறிப்போகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்... 

Next Story

மேலும் செய்திகள்