பாபநாசம் அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 340 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
நெல்லை பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 340 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ கூடாது என்றும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருவாய் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்குமாறு நெல்லை ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்