பயிற்சி முடித்த வீரர்களை வழியனுப்பும் விழா - களைகட்டிய கம்பீர அணிவகுப்பு மரியாதை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கப்பற்படை விமான பயிற்சி தளத்தில் இன்று 93-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு மரியாதையுடன் களைகட்டியது.
பயிற்சி முடித்த வீரர்களை வழியனுப்பும் விழா - களைகட்டிய கம்பீர அணிவகுப்பு மரியாதை
x
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கப்பற்படை விமான பயிற்சி தளத்தில் இன்று 93-வது  ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு மரியாதையுடன் களைகட்டியது. தமிழகம் மற்றும் புதுவை கடற்படை அட்மிரல் ஜோதிஸ் குமார் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 20 வாரங்கள் தரை மற்றும் வான் வழியில் சிறப்பாக பைலட் பயிற்சி முடித்த 9 கப்பற்படை வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஹெலிகாப்டர்  மூலமும், கம்பீர நடை அணிவகுப்பு மரியாதையும் நடைபெற்றது. தரை, வான் உள்பட பல்வேறு தளங்களில் சிறப்பாக பயிற்சி முடித்த வீரர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்