"சாட்சிகளை ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும்" - மாவட்ட, மகளிர், கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு

மாவட்ட மற்றும் மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதி மன்றங்கள், முக்கிய குற்ற வழக்குகளில் கட்டாயம் ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சாட்சிகளை ஆடியோ, வீடியோ பதிவு செய்ய வேண்டும் -  மாவட்ட, மகளிர், கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு
x
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளில் கட்டாயம் ஆடியோ வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நடை முறையை பின்பற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சாட்சிகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுக்கான அனைத்தையும் தமிழக அரசு 3 மாதத்திற்குள் செய்து தரவும் உத்தரவில் கூறியுள்ளனர். பலர் பிறழ் சாட்சிகளாக மாறுவதால் குற்றவாளிகள் விடுதலையாவதை தடுக்கும் வகையில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம், இதுகுறித்த நிலை அறிக்கையை வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்