வெங்காயத்தின் விலை குறையுமா?

சென்னை மாநகருக்கு மட்டும் நாளொன்றுக்கு 40 லாரிகளில் 4 லட்சம் கிலோ வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வருகிறது
வெங்காயத்தின் விலை குறையுமா?
x
சென்னை மாநகருக்கு மட்டும் நாளொன்றுக்கு  40 லாரிகளில் 4 லட்சம் கிலோ வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு வருகிறது 2 மாதத்திற்கு முன்பு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான வெங்காயம், தற்போது ரூ.130 வரை விற்பனை ஆகிறது.  தமிழ்நாட்டிற்கு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராவில் இருந்து அதிகளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது புள்ளி விபரப்படி, இந்தியாவின் 40 சதவீத வெங்காய தேவையை பூர்த்தி செய்யும் மாநிலமாக கர்நாடகா உள்ளது. வெங்காய விலை உயர்வால், எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது, இந்தியா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, 5 ஆயிரம் கிலோ வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்கலாம் என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டிருந்தார் இதனை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார் இந்நிலையில், வெங்காயத்தின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என வியாபாரிகள் கருத்து
தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்