"நடிகர் பாக்யராஜை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்"

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பாக்யராஜ் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திருப்பதியில் மகளிர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் பாக்யராஜை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பாக்யராஜ்  மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திருப்பதியில் மகளிர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற திரைப்பட பாடல் வெளியிட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் பாக்கியராஜ் பெண்கள் கட்டுப்பாடாக இல்லாமல் இருப்பதே அவர்கள் மீதான வன்முறைக்கு காரணம் என பேசினார். இதனை கண்டித்து ஆந்திர மாநில மகளிர் சங்கத்தினர் திருப்பதி மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்