இடிந்துவிழும் நிலையில் வேளாண் அலுவலக கட்டிடம்

செங்கம் பகுதியில் இடிந்துவிழும் நிலையில் காணப்படும் வட்டார வேளாண் அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்துவிழும் நிலையில் வேளாண் அலுவலக கட்டிடம்
x
செங்கம் பகுதியில் இடிந்துவிழும் நிலையில் காணப்படும் வட்டார வேளாண் அலுவலகத்தை இடித்துவிட்டு, புதிய அலுவலகம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  செங்கம் வட்டார வேளாண் அலுவலகம் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அலுவலக கட்டிடத்தின் சுற்றுச்சுவர், மேற்கூரை உள்ளிட்ட பெரும்பாலன பகுதிகள் விரிசலடைந்து, எந்நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது. இதனால்,  வேளாண் அதிகாரிகள் அச்சத்துடன் பணிபுரியும் சூழல்ஏற்பட்டுள்ளது. எனவே,  அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்